வனத்துறை விருது: மாணவர்களுக்கு தங்க நாணயம், ஆஸ்கர் வெற்றியாளர்களுக்கு பாராட்டு!

கோவை மாவட்டம், காரமடை வனச்சரகம் சார்பில் காரமடை அடுத்த மாநார் பகுதியில், சிறந்த மாணவர் விருது, சிறந்த பணியாளர் விருது, சிறந்த கலைக்கழு விருது என முப்பெரும் விழா நடைபெற்றது.

வனத்துறை மக்கள் தொடர்பு அலுவலரும், விழா ஒருங்கிணைப்பாளருமான பிரேம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த முப்பெரும் விழாவில், மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, உதவி வன பாதுகாவலர் விஜயகுமார், காரமடை வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின், காவல் ஆய்வாளர் முருகையன் மற்றும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சந்திரபாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

சிறப்புரையின்போது, காடுகளை பாதுகாப்பதில், வனத்துறையினருடன் இணைந்து பழங்குடி மக்களும் உள்ளதாக கூறியவர்கள், பழங்குடி மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் இருப்பதாகவும், இதனை பயன்படுத்தி பழங்குடி மக்களின் குழந்தைகள் சிறப்பாக கற்வி கற்று வாழ்க்கையில் முன்னேற்ற பாதைக்கு செல்ல வேண்டும். உங்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம் என்றனர்.

இந்த விழாவில், யானை வளர்ப்பு குறும்படத்தில் ஆஸ்கர் விருது பெற்ற பொம்மன் பெள்ளி மற்றும் குணச்சித்ர வேடத்தில் விருது பெற்ற சஞ்சனா ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

தொடர்ந்து, பத்தாம் வகுப்பு, பனிரென்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த அப்பகுதியில் உள்ள பழங்குடியின மாணவ மாணவிகளுக்கு தங்க நாணயங்கள் வழங்கி அவர்களுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. மேலும், பழங்குடியின பள்ளி மாணவ மாணவிகள் 100 க்கும் மேற்பட்டோருக்கு  நோட்டு புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வாகை தொண்டு நிறுவன அறங்காவலர் ஜெயந்தி வழங்கினார். இதில்,  தொண்டு நிறுவன நிர்வாகிகள் பிரியா, லதா, செல்வி, மீனா மற்றும் வனத்துறையினர்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்