உலகக் கோப்பை கால்பந்து திருவிழா வரும் 11-ம் தேதி கோலாகலமாக தொடக்கம்!!
கிரிக்கெட், ஒலிம்பிக்ஸ் மற்றும் பிற உள்நாட்டு அல்லது சர்வதேச விளையாட்டுப் போட்டிகளின் முடிவுகள் மற்றும் செய்திகள்.
கோவையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வீல்சேர் டி20 கிரிக்கெட் போட்டி
கோவாவை வீழ்த்தி தமிழ்நாடு அணி சாம்பியன்
மாற்றுத்திறனாளிகளின் திறன்களை ஊக்குவிக்கும் விதமாக கோவையில் தமிழ்நாடு வீல்சேர் கிரிக்கெட் சங்கம் மற்றும் கலைமகள் கல்லூரி இணைந்து வீல்சேர் டி20 கிரிக்கெட் லீக் போட்டி,நரசீபுரம் பகுதியில் உள்ள கலை மகள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது..
இரண்டு நாட்கள் நடைபெற்ற இதில், மொத்தம் மூன்று போட்டிகள் கொண்ட தொடராக போட்டிகள் நடைபெற்றன..
முன்னதாக போட்டிகளை கல்லூரியின் அறங்காவலர் தங்கவேலு தொடங்கி வைக்க, முதல்வர் முனைவர் மாலா வீரர்களை வாழ்த்தி வரவேற்றார்.
போட்டியில் வீல் சேரில் அமர்ந்தபடி பவுலிங்,பேட்டிங் என கிரிக்கெட் போட்டியை மாற்றுத்திறனாளிகள் அசத்தலாக விளையாடினர்..
இத்தொடரின் முதல் போட்டியில் கோவா அணி வெற்றி பெற்ற நிலையில், அடுத்த இரண்டு போட்டிகளிலும் அதிரடியாக விளையாடிய தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், லட்சுமி அத்வைத் நிறுவனத்தின் மனிதவளத் தலைவர் கிருஷ்ணகுமார், சி.எஸ்.ஆர்.தலைவர் அனு கிருத்திகா, ஐ எக்ஸ்ப்ளோர் பவுண்டேஷன் நவநீத கிருஷ்ணன், ஜோதுன்ஹெய்ம் அறக்கட்டளை எபினேசர், ராக் அமைப்பு ராம்மோகன், ரோட்டரி மித்ருத்வா பத்மநாபன் மற்றும் தமிழ்நாடு வீல்சேர் கிரிக்கெட் சங்கத் தலைவர் துரைபாண்டியன், பயிற்சியாளர் அனீஷ் ஆகியோர் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளி வீரர்களின் அசாத்திய திறமையையும், விடாமுயற்சியையும் பாராட்டி கௌரவித்தனர்.
அதே போல,போட்டி வெற்றிகரமாக நடைபெற ஆதரவு வழங்கிய அனைத்து நன்கொடையாளர்கள், நிறுவனங்கள், அமைப்புகள் உள்ளிட்டோருக்கு தமிழ்நாடு வீல்சேர் கிரிக்கெட் சங்கம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது..
போட்டியில் முதல் இடம் பிடித்த தமிழ்நாடு அணிக்கு வெற்றிக்கோப்பை மற்றும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன...
தொடரின் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை கோவாவின் நாகேஷ் ரெட்கரும், சிறந்த பந்துவீச்சாளர் விருதை தமிழ்நாட்டின் அசோக் குமாரும் வென்றனர்.
YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்
- குப்பிச்சிபாளையம் ஹவுசிங் போர்டு மக்களுக்கு இனி ஜாக்பாட்!! இன்று முதல் பஸ் எண் 104 பேருந்து சேவை!!!
- PM👩💼 பெண்கள் பொருளாதார சக்தியாக மாறும் புதிய திட்டம்! கோவையில் வரவேற்பு! வரவேற்பு
- அமைச்சரிடம் பெண்கள் வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு- tvk காவல்துறைக்குஅமைச்சர் கே விக்னேஷ் அறிவுறுத்தல்
- 🔥 கோவையில் மாபெரும் இலவச பல்துறை மருத்துவ முகாம்! அமைச்சர் வி. சம்பத்குமார் நேரில் பங்கேற்பு
- 40 ஆண்டுகளுக்குப் பிறகு கோயம்புத்தூரில் மீண்டும் சர்வதேச கிராண்ட்மாஸ்டர் சதுரங்கப் போட்டி
- 🚨 திமுகவை அவதூறாக பேசிய கவுன்சிலர் சிக்கலில்! வழக்கு தொடர்வோம் – சரத் விக்னேஷ்
- 🔥 கோவையில் டாக்டர் கிருஷ்ணசாமி பரபரப்பு! பழனி கோவில் நில விவகாரத்தை CBI விசாரிக்க கோரிக்கை
- வஹ்தத்தே இஸ்லாமே ஹிந்த் சார்பாக மாநிலம் தழுவிய ஊழியர்களுக்கான நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது,
- காமராஜர் பிறந்தநாள் விழா: லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி; மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
- கோவையில் சர்வதேச கராத்தே போட்டி! டோனி பொன்னையாவுக்கு சிறப்பு விருது வழங்கிய எஸ்.பி. வேலுமணி!