லக்கினம் நன்றாக இருந்தால் :
ஜாதகர் வளரும் சூழ்நிலை மிகவும் நன்றாக இருக்கும் , மேலும் ஜாதகரின் உடல் நிலை மிகவும் நன்றாக இருக்கும், மன ஆற்றல் ,தன்னம்பிக்கை , மன நலம் , வாழ்க்கையில் சகல வளங்களும் நிறைந்து இருக்கும் , கற்பதில் ஆர்வம் அதிகமிருக்கும் , எண்ணம் செயல்பாடு நேர்மையான அமைப்பில் இருக்கும் .
இரண்டாம் வீடு நன்றாக இருந்தால் :
நல்ல அறிவு திறன் , சிறப்பான வருவாய் , குடும்பம் சிறப்பாக அமையும் , ஜாதகரின் பேச்சு திறன் சிறப்பாக அமைந்து இருக்கும் , மேலும் தனது குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும் சிறப்பாகவும் நடத்தி செல்லும் ஆற்றல் ஜாதகருக்கு அதிகம் உண்டு.
மூன்றாம் வீடு நன்றாக இருந்தால் :
ஜாதகரின் மன நிலை , ஜாதகரின் நண்பர்கள் , மேலும் தகவல் தொடர்பு சம்பந்தப்பட்டவை , எழுத்தாற்றலின் மூலம் ஜாதகர் பெரும் நன்மை , ஜாதகர் மேற்கொள்ளும் சிறு பயணங்கள் , ஜாதகரின் மன வலிமை , தைரியம் , சிறு அதிர்ஷ்டம் போன்ற நிலைகளை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள இயலும் .
நான்காம் வீடு நன்றாக இருந்தால் :
தனது தாயின் நிலை , அவரால் ஏற்ப்படும் யோக வாழ்க்கை , ஜாதருக்கு அமையும் சொத்து , சுகம் , வீடு , வண்டி வாகனம் , ஜாதகருக்கு அமையும் சொகுசு வாகனம் மற்றும் வீடு , விவசாய நிலம் மூலம் ஜாதகர் அடையும் லாபம் போன்றவை சிறப்பாக அமையும் .
ஐந்தாம் வீடு நன்றாக இருந்தால் :
ஜாதகர் தனது பூர்விக இடத்தில் வசிப்பதால் நன்மைகள் அதிகம் , குழந்தை பாக்கியம் மற்றும் வாரிசு மூலம் அதிர்ஷ்ட வாழ்க்கை ஜாதகருக்கு ஏற்ப்படும் , அவர்கள் வழியே ஜாதகருக்கு ஏற்ப்படும் நல்ல பெயரும் புகழும் . ஜாதகர் அனுபவிக்கும் பொழுது போக்கு விசயங்கள் , கலை வாழ்வில் ஈடுபாடு போன்ற விசயங்கள் சிறப்பாக அமையும் .
ஆறாம் வீடு நன்றாக இருந்தால் :
உடல் நலம் முயற்ச்சியால் ஜாதகருக்கு கிடைக்கும் வெற்றி , கடன் பெறுவதால் ஏற்ப்படும் முன்னேற்றம், வழக்குகளில் கிடைக்கும் வெற்றி , தனது தாய் மாமன் மூலம் ஜாதகர் அனுபவிக்கும் நல்ல வாழ்க்கை போன்ற விஷயங்கள் சிறப்பாக அமையும் .
ஏழாம் வீடு நன்றாக இருந்தால் :
ஜாதகரின் மனைவி மற்றும் ஆண் / பெண் நண்பர்கள், அவர்களால் ஏற்ப்படும் நன்மைகள் , ஜாதகரின் கூட்டாளி , தொழில் முறை கூட்டாளி , கூட்டு தொழிலால் அடையும் நன்மைகள் , தொழில் நிலையில் ஏற்ப்பாடு நிலையான வளர்ச்சி போன்ற நிலைகள் சிறப்பாக அமையும் .
எட்டாம் வீடு நன்றாக இருந்தால் :
ஜாதகருக்கு திடீர் என வரும் அதிர்ஷ்ட வாழ்க்கை , புதையல் , பூரண ஆயுள் , விபத்திலிருந்து வெகு விரைவில் உடல் நிலை முன்னேற்றம் , சொந்த தொழில் செய்யும் பொழுது ஜாதகருக்கு ஏற்ப்படும் திடீர் வளர்ச்சி , வாகன மாற்றம் .போன்ற நிலைகள் சிறப்பாக அமையும் .
ஒன்பதாம் வீடு நன்றாக இருந்தால் :
ஜாதகருக்கு ஏற்ப்படும் நல்ல பெயர் , நீதி நேர்மையான மன பக்குவம் , பாக்கியம் செய்ததால் ஜாதகருக்கு அமையும் நல வாழ்க்கை , இறை நிலையுடன் ஜாதகருக்கு ஏற்ப்படும் தொடர்பு , கடவுள் பக்தி , அறிவியல் ரீதியான ஆராய்ச்சி , அதனால் ஜாதகர் அடையும் நன்மைகள் , போன்ற நிலைகள் சிறப்பாக அமையும் .
பத்தாம் வீடு நன்றாக இருந்தால் :
ஜாதகரின் கௌரவம் , ஜீவனம் , தொழில் , சுய தொழில் செய்வதால் பெரும் அபரிவிதமான முன்னேற்றம் , தனது தகப்பனார் அவர் மூலம் ஜாதகர் அடையும் முன்னேற்றம் , வாகன சுகம் நாற்கால் ஜீவன்கள் வளர்ப்பதால் ஜாதகர் அடையும் நன்மைகள் .போன்ற நிலைகள் சிறப்பாக அமையும் .
லாப ஸ்தானம் நன்றாக இருந்தால் :
ஜாதகரின் துணைவியார் , ஜாதகரின் நீடித்த அதிர்ஷ்ட வாழ்க்கை , எதிர் பாலினரிடம் ஏற்ப்படும் மயக்கம் , ஜாதகரின் எதிர்பார்ப்புகள் மற்றும் நம்பிக்கைகள் , ஜாதகரின் எண்ணம் பலிதம் , அனைத்து சுக போகங்களையும் அனுபவிக்கும் யோகம், போன்ற நிலைகள் சிறப்பாக அமையும் .
பன்னிரெண்டாம் வீடு நன்றாக இருந்தால் :
ஜாதகர் அதிகமான பணம் முதலீடு செய்வதால் அடையும் லாபம், மற்றும் வாழ்க்கையில் திடீர் என நிகழும் யோகம் , நல்ல நிம்மதியான தூக்கம் , அறிவின் செயல் பாடுகள் , மன ஆற்றல் மற்றவர்களால் ஏற்ப்படும் மன நிம்மதி , ஆன்மிக வாழ்வில் ஏற்ப்படும் முன்னேற்றம் போன்ற நிலைகள் சிறப்பாக அமையும் .
வாழ்க வளமுடன்
Tiruchendur astro Ram sridhar
Contact & WhatsApp
9360972178