பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்த தமிழக அமைச்சர் நிர்மல்குமார் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தித்தார்.அப்போது பேசிய அவர், தமிழக முதல்வர் கரூருக்குச் செல்வதால் திமுகவிற்கு ஏன் இவ்வளவு பயம் வருகிறது என்று தெரியவில்லை என்றும் இந்த மாநிலத்தின் எந்தப் பகுதிக்கும் செல்வதற்கு முதல்வருக்கு 100 சதவீதம் உரிமை உண்டு என்றும் தெரிவித்தார்.முதல்வர் அங்கு சென்றால் மக்கள் அவரிடம் தங்களைப் பற்றி என்ன சொல்லிவிடுவார்களோ என்ற பயம் திமுகவினரை உள்ளதாகவும் தமிழக வெற்றி கழகத்தில் 100% சதவீதம் நேர்மையான நிர்வாகம் மட்டுமே நடைமுறையில் இருந்து வரும் நிலையில் அதன் காரணமாகத்தான் புதிய பதவிகள் வழங்கப்படும் போது முழுமையான வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.மின்சாரத் துறை குறித்துப் பேசிய அவர்,தற்போது மின் துறையை முழுமையாகச் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் இதன் தொடர்ச்சியாக மின்கட்டணத்தைக் குறைப்பது குறித்த அடிப்படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் பொதுமக்கள் சந்திக்கும் மின்சாரத் துறை சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாகக் குறைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.செந்தில் பாலாஜி வழக்கில் காவல்துறை சுணக்கம் காட்டி வருகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்த ஆட்சியின் போது கூட அமலாக்கத்துறை எத்தனையோ சம்மன்களை வழங்கியதாகவும் அவருடைய தம்பி ஏற்கனவே தலைமறைவாக இருந்தார் என்றும் சுட்டிக்காட்டினார். மேலும், செந்தில் பாலாஜிக்கு ஓடி ஒழிவதெல்லாம் ஒன்றும் பெரிய விஷயமே இல்லை என்றும் அன்று மட்டும் காவல்துறை ஒரு ஐந்து நிமிடம் அசந்திருந்தால் அவர் தப்பித்திருப்பார் என்றும் சம்மன் அனுப்பி அழைத்தால் நேரில் ஆஜராவதில் என்ன பிரச்சனை என்றும் கேள்வி எழுப்பியதுடன், அப்படியென்றால் அந்த குற்றத்தில் இவர்களுடைய ஈடுபாடு எந்த அளவில் உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். எங்களுக்குக் கூட எவ்வளவோ சம்மன்கள் வந்துள்ளன, நாங்களெல்லாம் டெல்லிக்குக் கூடச் சென்று நேரில் ஆஜராகியுள்ளோம் என்று 100% தவறு செய்திருப்பதால்தான் ஆஜராகாமல் தவிர்க்கிறார்கள் என்றும் இந்த விவகாரத்தில் சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை சம்பந்தப்பட்ட துறையினர் சரியாகச் செய்வார்கள் என்றும் தெரிவித்தார்.மாவட்ட ஆட்சியர்கள் தங்களுக்கு வரும் பொதுமக்களின் மனுக்களைச் சரியாகப் பகுப்பாய்வு செய்து உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் இதில் எந்த இடத்திலும் எந்தத் தவறும் செய்யப்படவில்லை என்றும் அமைச்சர் நிர்மல்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
கரூர் பயணம் குறித்து திமுகவை சாடிய நிர்மல்குமார்... செந்தில் பாலாஜி விவகாரத்திலும் கடும் விமர்சனம்!"
YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்
- குப்பிச்சிபாளையம் ஹவுசிங் போர்டு மக்களுக்கு இனி ஜாக்பாட்!! இன்று முதல் பஸ் எண் 104 பேருந்து சேவை!!!
- PM👩💼 பெண்கள் பொருளாதார சக்தியாக மாறும் புதிய திட்டம்! கோவையில் வரவேற்பு! வரவேற்பு
- அமைச்சரிடம் பெண்கள் வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு- tvk காவல்துறைக்குஅமைச்சர் கே விக்னேஷ் அறிவுறுத்தல்
- 🔥 கோவையில் மாபெரும் இலவச பல்துறை மருத்துவ முகாம்! அமைச்சர் வி. சம்பத்குமார் நேரில் பங்கேற்பு
- 40 ஆண்டுகளுக்குப் பிறகு கோயம்புத்தூரில் மீண்டும் சர்வதேச கிராண்ட்மாஸ்டர் சதுரங்கப் போட்டி
- 🚨 திமுகவை அவதூறாக பேசிய கவுன்சிலர் சிக்கலில்! வழக்கு தொடர்வோம் – சரத் விக்னேஷ்
- 🔥 கோவையில் டாக்டர் கிருஷ்ணசாமி பரபரப்பு! பழனி கோவில் நில விவகாரத்தை CBI விசாரிக்க கோரிக்கை
- வஹ்தத்தே இஸ்லாமே ஹிந்த் சார்பாக மாநிலம் தழுவிய ஊழியர்களுக்கான நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது,
- காமராஜர் பிறந்தநாள் விழா: லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி; மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
- கோவையில் சர்வதேச கராத்தே போட்டி! டோனி பொன்னையாவுக்கு சிறப்பு விருது வழங்கிய எஸ்.பி. வேலுமணி!