கோவை.
கோவையில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை கைது செய்ய வலியுறுத்தி இன்று 10.10.2026 மாலை 5.00 மணிக்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் எஸ்.ஐ.ஆர். மூலம் 13 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கி உள்ளார். இது நாடு முழுவதும் மிகப் பெரிய சர்ச்சையாக எழுந்துள்ளது.
ஞானேஷ்குமாருக்கு எதிராக இரண்டு தேர்தல் ஆணையர்கள் எழுதிய கடிதங்கள் கசிந்துள்ளது. ஞானேஷ்குமார் பதிவிலக வேண்டும் என்றும் அவர் கைது செய்யப்படவேண்டும் என்றும் வலியுறுத்தி நாடுதழுவிய அளவில் போராட்டங்கள் வெடித்துள்ளது. டெல்லியில் போராடிய இளைஞர்கள் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரயில்கள், மெட்ரோ ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது அறிவிக்கப் படாத எமெர்ஜென்சி ( அவசர நிலை ) போல உள்ளது.
எனவே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தியும், அவர் கைது செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கோவை காந்திபுரம் கிராஸ் கட் ரோடு சந்திப்பில் மறியல் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டனர்.
அவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைதாகி உள்ளனர்.
இந்தப் போராட்டத்திற்கு மாட்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளர் ஜே.ஜேம்ஸ் ஆகியோர் தலைமை தாங்கினார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாமன்ற உறுப்பினர் சாந்தி சந்திரன், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் வி.ஆர்.பாண்டியன், அஷ்ரப் அலி, கிழக்கு மண்டல செயலாளர் எஸ்.சண்முகம், சையது இப்ராஹிம், ஏ.பி.மணிபாரதி ஆகியோரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த மாநில குழு உறுப்பினர் ஏ.ராதிகா, சி.ஐடி.யூ. மாவட்ட பொதுச் செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் தலைவர் கே.மனோகரன், மாமன்ற உறுப்பினர் வி.ராமமூர்த்தி, என்.ஜாகீர், தினேஷ்ராஜா, கே.எஸ்.கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஞாணேஷ்குமாரை கைது செய்ய வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது.
YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்
- 🔴LIVE:கோவையில் CM விஜய்பெரியார் அறிவுலகம் திறப்பு விழா | அரசு நலத்திட்ட உதவிகள் | TVK
- 🔴பெரியார் அறிவுலகத்தில் சிலைகள் அகற்றமா? விஜய்க்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் திமுக எம்பி ஈஸ்வரசாமி
- வ.உ.சிதம்பரனார் கப்பல் விட்ட நாள்! 🚢 வணிகர் தினமாக கொண்டாடிய இந்து வியாபாரிகள் சங்கம்
- 🚨 BREAKING NEWS: தேசிய செயலாளர் மா. வெங்கடேசன் செய்தியாளர் சந்திப்பு! 🔴 LIVE | பரபரப்பு பேட்டி
- முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் 95வது பிறந்தநாள் விழா. மரக்கன்றுகள் வழங்கி கொண்டாட்டம்..
- அப்துல் கலாம் பிறந்தநாளில் கனிமொழி சந்தோஷ் MLA தொடங்கிய KGF திட்டம்!
- அகில இந்திய சி.பி.எஸ்.இ ஹாக்கி போட்டி சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி இரண்டாம் இடம்
- 🔴 LIVE: திமுக பரந்தாமன் அதிரடி செய்தியாளர் சந்திப்பு! 🔥 அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு? |களம் TV
- தலைமை தேர்தல் ஆணையரை கண்டித்தும் காவல்துறையை கண்டித்தும் கோவையில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
- கோவை சிங்காநல்லூரில் முடங்கிய அடிப்படை வசதிப் பணிகள்! மாநகராட்சி ஆணையரிடம் நா.கார்த்திக் அதிரடி மனு!