NEET முறைகேட்டுக்கு யார் பொறுப்பு?தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும்! -காங்கிரஸ்

 

 

நீட் உள்ளிட்ட தேசிய அளவிலான தேர்வுகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கராஜ் வலியுறுத்தினார்.

 

இது குறித்து கோவை காமராஜ் பவனில்  நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மேசிய அவர்,


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கூட்டத்தில், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக கூறினார்..


நீட், சிபிஎஸ்இ,  மற்றும் தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் தேர்வுகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் முறைகேடுகள், வினாத்தாள் கசிவுகள் மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் மாணவர்களின் எதிர்காலத்தை கடுமையாக பாதித்து வருகின்றன..

இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும்.

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தேர்வு முறைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் தேர்வுகளில் நம்பகத்தன்மையை நிலைநிறுத்தும் வகையில் உரிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ள காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும் என தெரிவித்தார்..

இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தீர்மானங்களை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என ரங்கராஜ் தெரிவித்தார்.

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்