திமுக - காங்கிரஸ் கட்சி கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது

கோவை


இந்த கூட்டத்திற்கு வந்த
கோவை மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள், முதல்வர் விஜய் படத்துடன், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் புகைபடம் வைக்கபட வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது காங்கிரஸ் கவுன்சிலர்கள் முன்னாள் முதல்வர் காமராஜர் படத்தை வைக்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில்  திமுக - காங்கிரஸ் கட்சி கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. திமுக கவுன்சிலர்கள் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் புகைபடத்தை தூக்கி கொண்டு வந்து முழக்கமிட்டபடி அதை மாமன்ற கூட்ட அரங்கில் மாட்டமுயன்றனர். காங்கிரஸ் கட்சியினரும் காமராசர் படத்தை தூக்கி கொண்டு வரவே கடும் வாக்குவாதம் ,
தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 அப்போது திமுக 
காங்கிரஸ் துரோகிகள் ஒழிக , காங்கிரஸ் ஒழிக என முழக்கம் எழுப்பினர். மேலும் 
மாமன்ற கூட்டத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியே வெளியேறு  எனவும்  முழக்கம் எழுப்பியதால் பரபரப்பான சூழல் நிலவியது. இந்த சூழலில் கோவை மாநகராட்சி ஆணையர்
கட்டா ரவி தேஜா  மைக்கில் இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தினார். மேலும்  தமிழக அரசு ஆணைப்படி முன்னாள் முதல்வர் புகைபடம் மாட்டலாம் என இருக்கின்றது எனவும்,
எனவே முன்னாள் முதல்வர் புகைபடம் மாட்டலாம் எனவும் அறிவித்தார். இதனையடுத்து இரு தரப்பினரையும் அவர் சமரப்படுத்திய நிலையில், கூட்டத்தில் இருந்து வெளியே வந்த காங்கிரஸ் கவுன்சிலர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது காங்கிரஸ் கட்சியையும், காமராசரையும் திமுகவினர் ஒழிக என்கின்றனர் என தெரிவித்த அவர், திமுகவினரின் செயல்பாடுகளை டெல்லி தலைமைக்கு கொண்டு செல்ல இருப்பதாகவும், இனி எக்காலத்திலும் திமுகவுடன் கூட்டணி வைக்க கூடாது என வலியுறுத்த இருப்பதாகவும் தெரிவித்தார். ராகுல்காந்தியிடம் விஜய் கேட்டுக்கொண்டதால் ஆதரவு அளித்ததாக தெரிவித்த காங்கிரஸ் கவுன்சிலர் அழகுஜெயபால் , இதில் துரோகம் எங்கே இருக்கின்றது எனவும் தெரிவித்தார் . கோவை மாமன்ற கூட்டத்தில் காங்கிரஸ் திமுக கவுன்சிலர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக மாமன்ற கூட்ட அரங்கில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்