சென்னை:
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஐ.எஸ்.இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என்றும், திமுக வேட்பாளர் மு.அப்பாவு வெற்றி பெற்றுள்ளார் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
2016 தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை - திமுக வேட்பாளர் அப்பாவு இடையே நேரடி போட்டி இருந்தது. வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் 45 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதிமுகவின் இன்பதுரை வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு 2016-ல் தொடர்ந்த தேர்தல் வழக்கில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் நீதிபதி அளித்த தீர்ப்பில், ‘104 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அப்பாவு வெற்றி பெற்றது மறு வாக்கு எண்ணிக்கையில் நிரூபணம் ஆகியுள்ளது. இந்த தீர்ப்பால் இன்பதுரை தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என ஆகாது. ஆனால