உர விலை உயர்வு: கோவை கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!

விலை உயர்வை கண்டித்து உர பாக்கெட்டுகளுடன் விவசாயிகள் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்தது.

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று தமிழ்நாடு விவசாயிகள் மாவட்ட குழு சார்பில் சங்க தலைவர்  சு.பழனிச்சாமி தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது ஒன்றிய பாஜக அரசு 2014 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தது. 

இதில் வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சாமிநாதன் குழு பரிந்துரைப்படி உற்பத்தி செலவுகளோடு 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து வழங்கப்படும் என்றும் குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவோம் என்று கூறினார்கள்.

ஆனால் வேளாண் உற்பத்தி செலவுகள் உயர்ந்து கொண்டே செல்கிறது. மறுபுறம் விவசாயிகள் உற்பத்தி செய்திடும் விலைப் பொருள்களுக்கு உரிய விலை கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.

ரசாயன உரங்களின் நிலையை கடுமையாக உயர்த்தி உளளார்கள். இந்த விலையேற்றம் மேலும் கூடும் என கூறப்படுகிறது. எனவே விலை உயர்வை ரத்து செய்ய மத்திய அரசின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் சு பழனிச்சாமி, செயலாளர் வி. ஆர். பழனிச்சாமி மற்றும் கேரள மாநில விவசாயிகள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். 

அப்போது பாக் ட்டம் பாஸ் பொட்டாஸ் காம்ப்ளக்ஸ் அம்மோனியா சல்பேட் உள்ளிட்ட உரங்களை பாக்கெட்டுகளாக எடுத்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்