இளைஞர் காங்கிரஸார் முற்றுகைப் போராட்டம்

இந்திய தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, கோவையில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுதன் மற்றும் ஆகாஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில், 50-க்கும் மேற்பட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து முழக்கங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

மாநிலத் தலைவர் சூரியபிரகாஷ், தேசிய பொதுச்செயலாளர் முகமது சாஹித், தேசிய செயலாளர்கள் சாகரிக மற்றும் பிந்தியா உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்