இணைப்பு சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

வனங்களை விற்பது, பங்குகளை விற்பது என்ற முடிவோடு செயல்படு வருகின்றது. இதை கண்டித்து கவுன்சில் செயலாளர் சிடிசி துரைசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு நடைபெற்றது.

கவுன்சில் தலைவர் ராக்கிமுத்து வரவேற்பு ஆற்ற, தொமுச பேரவை, தொலைத்தொடர்பு துறை இணை பொதுமேலாளர் விஜயகுமார் சிறப்புரையாற்ற, பேரவை இணை பொது செயலாளர் பிரபாகரன், தொழிலாளர் அணி மாநில துணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன்,  மற்றும் நாகராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதில், ஒன்றிய அரசு தொழிலாளர் விரோத 4 தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வேண்டும். தேசிய பண மயமாக்கல் கொள்கை 2.0 என்ற பெயரில் பொது சொத்துக்களை குத்தகைக்கு விடக்கூடாது, மின்சார சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும் விதை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் பொது விநியோக சட்டத்தை வலுப்படுத்த வேண்டும் மாநில உரிமைகளை பறிக்கக்கூடாது விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று குறைந்தபட்ச ஆதார விலகி நிறம் செய்ய வேண்டும் பேச்சுரிமை எழுத்துரிமை பறித்து அறிவார்ந்த நக்சலைட் என்ற முத்திரை குத்த கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளும், தவெக அரசு இன்னொரு அனல் மின் நிலையம் விரிவாக்கம் தூத்துக்குடி அனல் மின் நிலையம் விரிவாக்கத்தை தனியாருக்கு தாரைவாக்க கூடாது கோவை அரியலூர் விருதுநகர் கோவை மின் பாதைகளை தனியாருக்கு தாரை வைக்கக்கூடாது ஸ்மார்ட் பெயிண்டர் என்ற பெயரால் தனியாருக்கு தாரை பார்க்க கூடாது மின்கல சேமிப்பு அமைப்பை தனியார்க்கு விற்கக் கூடாது 2000 மின்வாகன சார்ஜிங் நிலையங்களை தனியார் இடம் ஒப்படைக்க கூடாது 200 மாணவர் விடுதிகளை தனியாரிடம் விடுவதை கைவிட வேண்டும் போக்குவரத்து ஆயிரம் மின் பேருந்துகளை மொத்தமாக தனியாரிடம் ஒப்படைக்க கூடாது, அங்கன்வாடி மற்றும் டாஸ்மாக் பணியாளர் அவர்களை அரசு ஊழியர் ஆக்கி காலம் வரை ஊதியம் வழங்க வேண்டும் போராடும் தூய்மை பணியாளர்களை அழைத்துப் பேச வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் எதற்காக எதிராக கோசங்கள் எழுப்பப்பட்டது.

கவுன்சில் நிர்வாகிகள் வணங்காமுடி, உமாகாந்தன், ஸ்டீபன்,  அப்பாவு, வாசுகி, கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தொமுச சிவில் சப்ளை ராஜகிருஷ்ணன், டாஸ்மாக் தொமுச சுப்பிரமணி, மின்வாரியம் தொமுச சந்திரன், ஆவின் தொமுச ஆனந்த், போக்குவரத்து தொமுச செல்லப்பன், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொமுச பாலு, மோட்டார் வாகன தொமுச மோகன், பொறியாளர் தொமுச கோபால், 
தமிழ்நாடு சிறு கடைகள் மற்றும் குறு தொழிலகம் தொமுச குமாரராஜபாண்டியன்,  சிடிசி கணேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியில் கவுன்சில் பொருளாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்