திமுக காழ்ப்புணர்ச்சியில் அவதூறு பரப்பி வருகிறது என அமைச்சர் ஷாஜகான் பேட்டி. 

 

திருப்பூர்: ஒட்டுமொத்த தமிழர்களின் வாக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு தான் என்பதை இடைத்தேர்தல் நிரூபிக்கும். தோல்வியிலிருந்து மீண்டு வருவதை விட்டு திமுக காழ்ப்புணர்ச்சியில் அவதூறு பரப்பி வருகிறது என அமைச்சர் ஷாஜகான் பேட்டி. 

தமிழர் ஒருவர் பிரதமராக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது அதற்கான தகுதி முதலமைச்சர் விஜய் இடம் உள்ளது எம்எல்ஏ சையது பாரூக் பேச்சு.

 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு வெற்றி கூட்டணி சார்பில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளராக போட்டியிடும் சத்யபாமாவை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம், ஜமா அத் நிர்வாகிகள் கூட்டம் தாராபுரம் தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான், வாணியம்பாடி எம்.எல்.ஏ  சையத் பாரூக் மற்றும் எம்.பி நவாஸ்கனி உள்ளிட்ட இந்திய முஸ்லிம்களை கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளராக போட்டியிடும் சத்யபாமாவிற்கு ஆதரவு தெரிவித்து விசில் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் அமைச்சர் பொறுப்பு கிடைத்த பின்னர் சமுதாய மக்களுக்கு கிடைத்த நலத்திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தனர் பின்னர் 

பேசிய வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் சையது பாரூக் பேசுகையில் 


தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது அதற்கான தகுதி முதலமைச்சர் விஜய்யிடம் தான் உள்ளது என பேசினார். 

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஷாஜகான் கூறுகையில் 


தமிழ்நாடு அரசு நான்கு மாதத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மதச்சார்பற்ற முற்போக்கு வெற்றி கூட்டணி வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற ஆதரவு திரட்டி வருகிறோம் என தெரிவித்தார். மேலும் கொள்கை எதிரியாக இருந்த அதிமுக ஆட்சி அமைக்க முயன்றதால்தான் சத்தியபாமா அதிலிருந்து வெளியேறி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது இடைத்தேர்தல் என்பது ஜனநாயக ரீதியான ஒன்று தான் இதில் தவறில்லை. திமுக தேர்தலில் தோற்கும் என யாரும் எண்ணவில்லை அந்த தோல்வியில் இருந்து அவர்கள் மீண்டு வருவதை விட்டுவிட்டு கால் புணர்ச்சியில் அவதூறு பரப்பி வருகின்றனர். யார் வேண்டுமானாலும் யார் மீதும் குற்றச்சாட்டு சொல்லிவிடலாம். தமிழர்கள் வாக்கு முழுவதும் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு தான் என்பதை இந்த இடைத்தேர்தல் நிரூபிக்கும் என தெரிவித்தார்.

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்