இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த கோரிக்கை

கோவையில்  தமிழ்நாடு அரசு மாவட்ட காஜிகள் கூட்டமைப்பு சார்பில்  ஆலோசனைக் கூட்டம் போத்தனூர்   மதினா மஹாலில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு மாவட்ட காஜிகள் கூட்டமைப்பின் தலைவர்  முகம்மது கிஃபாயத்துல்லா தாவூதி தலைமையில் நடைபெற்ற  இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாவட்ட அரசு காஜிகள், இஸ்லாமிய அறிஞர்கள், சமூக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்ட காஜி அப்துர் ரஹீம் இம்தாதி பாகவி ஒருங்கிணைத்த இதில் கூட்டமைப்பின் செயலாளர் 
கூட்டத்தில்,செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் செயலாளர் முஜிபுர் ரஹ்மான்,பொருளாளர் முகம்மது கஸாலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்..

கூட்டத்தில்  இஸ்லாமிய சமூகத்தின் கல்வி, வேலைவாய்ப்பு, சமூக முன்னேற்றம், மத உரிமைகள் மற்றும் அரசு சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் குறித்து விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

தொடர்ந்து செய்தியாளர்களடம் பேசிய தமிழ்நாடு அரசு காஜிகள் கூட்டமைப்பின் செயலாளர் முஜிபுர் ரஹ்மான்,தமிழகத்தில் தற்போது  புதிய முதல்வராக  பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் அவர்களுக்கு அரசு காஜிகள்  கூட்டமைப்பு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறினார்.. 

தொடர்ந்து பேசிய அவர்,இஸ்லாமியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 3.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும், மேலும், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள இஸ்லாமியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என  வலியுறுத்தினார்..

இதனுடன், புதிய பள்ளிவாசல்கள் கட்டுவதற்கு அனுமதி பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை அரசு எளிமைப்படுத்த வேண்டும் என்றும், மத சுதந்திரம் மற்றும் மத உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்..

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்