KGF என்ற திட்டம் அறிவித்தார் எம் எல் ஏ கனிமொழி சந்தோஷ்

கோவை 

கணுவாயில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா
காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து
KGF என்ற திட்டம் அறிவித்தார் எம் எல் ஏ கனிமொழி சந்தோஷ்


காமராஜர் பிறந்தநாளில் கோவை கணுவாய் பகுதியில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தனது தொகுதியில் கேஜிஎப் என்னும் கவுண்டம்பாளையம் கவர்னன்ஸ் பெல்லோசிப் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

கல்வி கண் திறந்த கர்ம வீரர் காமராஜரின் பிறந்தநாளை கல்வி தினமாக தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை கணுவாய் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தார். 

மேலும் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜர் படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். அங்கு வைத்து தனது தொகுதியில் கேஜிஎப் என்னும் கவுண்டம்பாளையம் கவர்னன்ஸ் பெல்லோசிப் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி சந்தோஷ் ஏற்கனவே ஈசாவுடன் இணைந்து பசுமை கவுண்டம்பாளையம் திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும், அது சிறப்பாக சென்று கொண்டிருப்பதாகவும், தற்போது தங்களது கொள்கைத் தலைவரும், கல்வி கண் திறந்த காமராஜர் பிறந்தநாளை ஒட்டி கேஜிஎப் என்னும் கவுண்டம்பாளையம் கவர்னன்ஸ் பெல்லோசிப் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

இத்திட்டமானது ஒவ்வொருவரும் சமூக அக்கறை மற்றும் பொருப்புடன் செயல்படவேண்டும் என்ற நோக்கத்தில் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 21 வயது முதல் 30 வயது வரை உள்ள படித்த பட்டதாரி இளைஞர்களில் விருப்பம் உள்ளவர்களை தேர்வு செய்து இண்டென்சிப் முறையில் 6 மாதம் சட்டமன்ற உறுப்பினருடையே பயணித்து பொதுமக்களின் அடிப்படை தேவைகள், சமூக தேவைகள், மக்களின் உண்மையான தேவைகளை அறிவதுடன், சட்டமன்ற உறுப்பினரின் வேலைகள் என்ன, பொருப்புகள் என்ன, கடமைகள் என்ன என்பதை அனைவரும் அறியும் போது தொகுதியிம் மேம்பாடு அனைவருடன் இணைந்து உயரும் என தெரிவித்தார்.

அதேபோல் அண்ணாமலை தவெக ஆட்சியினை கைதூக்கிவிட வேண்டும் என தெரிவித்த கருத்தை வரவேற்பதாக தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் திரளாக கலந்து கொண்டனர். அதேபோல் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கினர்.

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்

Feed not found.