திமுக.,வில் இருந்த கவுன்சிலர் பாபு கட்சி குறித்து அவதூறு பரப்பியது குறித்து திமுக கவுண்டம்பாளையம் பகுதி செயலாளர் சரத் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ஆதரவைப் பெற்று, முன்னாள் அமைச்சரும், கோவை மாவட்ட பொறுப்பாளருமான செந்தில் பாலாஜியின் தயவால் கவுன்சிலர் பாபு வெற்றி பெற்றார். தற்போது அவர், மிக மோசமாக, பொய்யான ஒரு குற்றச்சாட்டைத் தெரிவித்து திமுக.,விலிருந்து வெளியேறுவதாக கூறியுள்ளார்.
மக்களை மூளைச்சலவை செய்து, குறுக்கு வழியில் திமுக அரசைப் பற்றி பல பொய்யான அவதூறுகளைத் தெரிவித்து தவெக., ஆட்சி பிடித்து உள்ளது. கவுன்சிலர் பாபு சென்னையில் விஜய் பதவியேற்ற அன்றே தவெக.,விற்கு சென்று விட்டார். அதற்கான ஆதாரங்கள் எங்களின் உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறிந்து ஓடி விட்டார். பாபு கரூர் கம்பெனி என்று சொல்கிறார். ஆனால் தற்போது அவர், மார்ட்டின் கம்பெனியில் சேர்ந்துள்ளார். கவுன்சிலராக வெற்றி பெற்ற போது அவர், கரூர் காரர்களே என்னை ஜெயிக்க வைத்ததாகத் தெரிவித்துள்ளார். இன்று 96 கவுன்சிலர்கள், 31 பேரூராட்சி, 8 நகராட்சிகளைப் பிடித்ததற்குத் செந்தில் பாலாஜியே காரணம்.
பாபு தனது ரியல் எஸ்டேட் தொழிலை பாதுகாக்க தவெக.,விற்கு சென்றுள்ளார். கவுன்சிலர் பாபு தனது அவதூறு கருத்தை திரும்ப பெற வேண்டும். இல்லை என்றால் அவர் மீது வழக்குத் தொடருவோம். கவுன்சிலர் அங்கீகாரத்தைப் பெற்று, கட்சி பொருப்பு வாங்கியும் ஒரு நாள் கூட அவர் வேலை செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது,
பெரியநாயக்கன் பாளையம் மத்திய ஒன்றிய செயலாளர் தாமோதரன், மாமன்ற உறுப்பினர்கள் சுபஸ்ரீ , கிருஷ்ணமூர்த்தி, வட்டச்செயலாளர்கள் டாக்டர் கணேஷ், சங்கர், ஆறுமுகம், கனகராஜ், மற்றும் வர்த்தக அணி துணை அமைப்பாளர் செந்தில் மூர்த்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.