கோவை.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மக்களின் அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய அளவில் மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்தி வருகிறது. இந்த இயக்கம் ஆகஸ்ட் 6 ம் தேதி தொடங்கி 15 ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
1. உலக அமைதி 2. நிம்மதியான வாழ்வு 3. தமிழ்நாட்டின் உரிமைகள் என்ற மூன்று முக்கியமான முழக்கங்களை இந்த மக்கள் சந்திப்பு இயக்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் முன்வைத்துள்ளனர்.
இன்று 13.08.2026 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு. கோவை வேலாண்டிபாளையத்தை அடுத்த கோவில் மேடு பகுதியில் இந்த மக்கள் சந்திப்பு இயக்கம் தொடங்கியது.
அங்கிருந்து வேலாண்டிபாளையம், வெங்கடாபுரம், சாய்பாபா காலனி ஆகிய பகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
அதேபோல மாலை 5.30 மணிக்கு சித்தாபுதூர் பகுதியில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளில் மாநில துணை செயலாளர் எம்.ரவி, மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் ஜே.ஜேம்ஸ், மேற்கு மண்டல செயலாளர் என்.சந்திரன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் கே.புருஷோத்தமன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.அஷ்ரப் அலி, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட செயலாளர் பேபி, மாமன்ற உறுப்பினர் மல்லிகா புருஷோத்தமன், நிர்மலா மருதகுட்டி, என்.மோகன், சி.ஜீவா, ராஜன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
அதேபோல சித்தாபுதூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலத் துணைச் செயலாளர் எம்.ரவி, மத்திய மண்டல செயலாளர் கே.ரவீந்திரன், மாநில குழு உறுப்பினர் கலை அஸ்வினி, மாமன்ற உறுப்பினர் பிரப ரவீந்திரன், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்டத் தலைவர் ஜே.கலா, ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் மாவட்டத் தலைவர் பி.முருகன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாவட்ட செயலாளர் மௌ.குணசேகர், மத்திய மண்டல குழு உறுப்பினர்கள் ஏ.பி.மணிபாரதி, கே.ராஜேந்திரன், எஸ்.மாணிக்கம், மத்திய மண்டல துணைச் செயலாளர் பி.அறிவொளி மற்றும் ஆர்.சுதர்சன், பி.எஸ்.என்.எல். ஜெகநாதன், மெசா.கண்ணன், ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.