மாஞ்சோலை, மேகமலை மற்றும் காவேரி விவகாரங்களில் தமிழ்நாடு அரசு கடும்  மெத்தனப்போக்கில்செயல்பட்டு வருகின்றது  தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 

 

கோவை:

மாஞ்சோலை, மேகமலை மற்றும் காவேரி விவகாரங்களில் தமிழ்நாடு அரசு கடும்  மெத்தனப்போக்கில் செயல்பட்டு வருகின்றது  என கோவை குனியமுத்தூரில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.. 
மேலும் யானை வழித்தடங்களை மறித்து ரிசார்ட்டுகள் கட்டவும், தேயிலைத் தோட்டங்களை ரிசார்ட்டுகளாக மாற்றவும் அனுமதிக்கும் அரசு, சாதாரண மக்களுக்கு 2 சென்ட் நிலம் வழங்க மறுப்பது ஏன் என டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பினார்.கோவை குனியமுத்தூரில் உள்ள, தனது இல்லத்தில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அவர் கூறியதாவது.. மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், மேகமலை வாழ் மக்கள் உரிமை மற்றும் காவேரி மேகதாது அணை விவகாரம் குறித்தும் பல்வேறு முக்கியக் கருத்துகளைத் தெரிவித்தார், மாஞ்சோலை மற்றும் மேகமலைப் பகுதிகளில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் மக்களை அங்கிருந்து வெளியேற்றக் கூடாது. 2006-ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின்படி 30 ஆண்டுகளுக்கு மேலாக வாழும் மக்களுக்கு அங்கேயே வாழ்வுரிமையை உறுதி செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி ஆகஸ்ட் 29-ஆம் தேதி நெல்லை ரயில் நிலையம் அருகே அனைத்துக் கட்சிகள் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு, புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன்மூர்த்தி உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர், இந்தியாவின் பல மாநிலங்களில் 2006 வன உரிமைச் சட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு இதனைச் செயல்படுத்தத் தயங்குகிறது. அதிகாரிகள் இச்சட்டம் பழங்குடியினருக்கு மட்டுமே உரியது என்ற தவறான புரிதலில் உள்ளனர். மலைவாழ் மக்கள் அனைவருக்கும் இச்சட்டம் பொருந்தும் என்பதை அரசு உணர்ந்து, நீதிமன்றத்தில் வலுவான வாதங்களை முன்வைக்க வேண்டும் வால்பாறை போன்ற பகுதிகளில் இலட்சக்கணக்கான ஏக்கர் அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான ரிசார்ட்டுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யானை வழித்தடங்களை மறித்து ரிசார்ட்டுகள் கட்டவும், தேயிலைத் தோட்டங்களை ரிசார்ட்டுகளாக மாற்றவும் அனுமதிக்கும் அரசு, சாதாரண மக்களுக்கு 2 சென்ட் நிலம் வழங்க மறுப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.
 கர்நாடக அரசு 64 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட மேகதாது அணட்டியைக் கட்ட ரூ.9,000 கோடி மதிப்பீட்டில் விரிவான அறிக்கையை மீண்டும் தாக்கல் செய்துள்ளது. பெங்களூருவின் குடிநீருக்காகக் கூடுதல் நீர் தேவை எனக் கூறி, காவேரியின் குறுக்கே அணை கட்ட முனையும் கர்நாடகாவின் கூற்றை ஏற்க முடியாது. எல்லைக்கு அருகே அணை கட்டப்பட்டால், தமிழகத்திற்கு வர வேண்டிய 177.2 டி.எம்.சி நீர் முற்றிலும் கிடைக்காமல் போகும்.  முதலமைச்சர் விஜய் அவர்கள் உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கூட்டத்தைக் கூட்டி, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தேவைப்பட்டால் அனைத்துக் கட்சியினரும் டெல்லி சென்று போராட வேண்டும். மாஞ்சோலை, மேகமலை மற்றும் காவேரி விவகாரங்களில் தமிழக மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறும் பட்சத்தில், போராட்டம் தீவிரமடையும் என டாக்டர் கிருஷ்ணசாமி எச்சரித்துள்ளார்.

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்