மரக்கன்றுகள் வழங்கி கொண்டாட்டம்..

கோவை ரேஸ்கோர்ஸ் பிரண்ட்ஸ் வாக்கிங் கிளப் சொசைட்டி ஆத்மா ரக்சஷ அறக்கட்டளைசார்பில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 95வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ரேஸ்கோர்ஸ் பகுதியில் மர கன்றுகள் நடப்பட்டு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை மாநகராட்சி துணை ஆணையர் சரஸ்வதி  திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து 8 வடிவ நடை பயிற்சி மையத்தை டி ஜே அசோசியேட்ஸ்  ஜோசப் திறந்து வைத்தார்.

 நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பிரண்ட்ஸ் வாக்கிங் கிளப் சொசைட்டி தலைவர் சிடி தாமோதரன் சாமி, செயலாளர் முத்துமாணிக்கம், சிறப்பு விருந்தினராக ரூட்ஸ் நிறுவன மேம்பாட்டு இயக்குனர் டாக்டர் கவிதாசன்  அப்துல் கலாம்  திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து வாழ்த்துரை வழங்கினார்.

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்