பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம்.*

கோவை பீளமேடு, ரொட்டிக்கடை மைதானத்தில்  திமுகவின் தொழிற்சங்க அமைப்பான மாநில வாணிப கழக பணியாளர் முன்னேற்றச் சங்க தலைவர் ராக்கிமுத்து தலைமையில், லேபர் பார்ட்டி ஆப் ஃபெடரேஷன் செயலாளர் தமிழ்ச்செல்வன் முன்னிலையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பேரவை செயலாளர்கள் பிரபாகரன், பெரியசாமி, மாநில துணைச்செயலாளர் சுப்பிரமணி, கவுன்சில் செயலாளர் துரைசாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

 டாஸ்மாக் ஊழியர்களுக்கு
பணி நிரந்தரம்,
ஏற்றுகூலி, இறக்கு கூலி, உடையும் பாட்டிலுக்கு இழப்பீடு, மின் கட்டணம், இட வாடகை உள்ளிட்ட இதர செலவினங்களை அரசே ஏற்றுக் கொண்டால் கூடுதல் விலை வாங்க வேண்டிய அவசியம் இல்லை உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். 

 கடந்த 23 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,   காலமுறை ஊதியம், ஊதிய உயர்வையும்  ஆர்ப்பாட்டத்தில் முன் வைத்தனர். 

 இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர்.

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்