கோவை.
தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் TCTU இந்த சங்கம் INTUC ன் ஒரு அங்கமாகும். இது அமைப்பு சாரா தொழிலாளர் தளங்களில் பணியாற்றுகிறது.
இந்த சங்கத்தின் 102 வது மாநில செயற்குழு கூட்டம், மறைந்த தலைவர் என்.நஞ்சப்பன் 76 ஆவது பிறந்தநாள் ஆகியவை மதுக்கரையில் உள்ள ஐ.என்.டி.யு.சி. சங்க அலுவலக வளாகத்தில், அதன் மாநிலத் தலைவர் புவனேஸ்வரி நஞ்சப்பன் தலைமையில் இன்று 2.07.2026 காலை 11 மணிக்கு நடைபெற்றது.
இதில் மாநிலம் முழுமையும் இருந்து பிரதிநிதிகள் வந்து கலந்து கொண்டார்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.செல்லகுமார், Ex.M.P., எச்.எம்.எஸ். சங்கத்தின் மாநில செயல் தலைவர் டி.எஸ். ராஜாமணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் பணியிட பாதுகாப்பு தொழிலாளர்களின் அடிப்படை உரிமை. பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றாத தொழிற்சாலை நிறுவனங்களின் உரிமைகளை ரத்து செய்ய வேண்டும்.
பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மிகவும் ஆபத்தான பணிகளை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட வேண்டும். இ.எஸ்.ஐ. வசதி செய்து தர வேண்டும். இந்த வசதிகளை செய்து தராத நிறுவனங்களை அனுமதிக்க கூடாது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு சட்டம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த 100 நாள் வேலை திட்டத்தின் அடிப்படை அம்சங்களை மாற்றி, வி.பி.ஜி. ராம்ஜி என்ற பெயரில் புதிய திட்டம் ஒன்றை ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ளது. இம் மாதம் முதல் தேதியில் இருந்து புதிய திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதை இந்த செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. போதைப் பொருள் பயன்பாட்டின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதை செயற்குழு மிகுந்த அக்கறையோடு சுட்டிக்காட்டுகிறது. இவற்றை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். அதே சமயம் இது ஒரு தனிப்பட்ட துறையின் பொறுப்பல்ல. காவல்துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை, நீதித்துறை, உள்ளாட்சி அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், மக்கள் அமைப்புகள் என அனைவரும் இணைந்து செயல்பட வேண்டிய தளமாகும் என்பதையும் செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.
அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யும் முறையை மேலும் எளிமையாக்க வேண்டும். கிராம நிர்வாக அதிகாரிகளின் தலையீட்டை முற்றிலுமாக நீக்க வேண்டும்.
NEET, SSC, CUET, TET உள்ளிட்ட தகுதி தேர்வுகளில் தொடர்ந்து நடந்து வரும் முறைகேடுகள் வினாத்தாள் கசிவு மற்றும் ஆழ் மாறாட்டம் புகார்கள் ஆகியவை தகுதி தேர்வுகளில் சாதாரண மக்களுக்குள்ள நம்பிக்கையை கேள்விக்குறியாகி உள்ளது. ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் எனவும் இந்த செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
கிக் செயலி வாயிலாக பணியாற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், வருங்கால வைப்பு நிதி, இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி, காப்பீடு உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளர் ஏ.செல்வகுமார் Ex.M.P., அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. முன்னதாக செல்லகுமார் மறைந்த தலைவர் என்.நஞ்சப்பன் உருவ சிலைக்கு மாலை அணிவித்து அம்ரியாதை செலுத்தினார்.
மூத்த காங்கிரஸ் தலைவரும் மாநில பேச்சாளருமான கு.பே. துரை அவர்களுக்கு ஏ.செல்வகுமார் Ex.M.P., சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்.
இந்த செயற்குழு கூட்டத்தில் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் செங்கை கண்ணன், கோதண்டன், மயிலை கணேஷ், மலைச்சாமி, தேவிகா, கோவிந்தராஜ், சந்தோஷ், சிவக்குமார், பிரேம்குமார், எஸ்தர், எமிமாள், பொன்னுசாமி, சைமன், பல்தே சிங், குணசேகரன், சந்திரசேகரன், மணிவண்ணன், ஜானி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினர் இருகூர் சுப்பிரமணியம், காளீஸ்வரன், கோபாலகிருஷ்ணன், ஸ்ரீதர், உதயகுமார், சந்தோஷ், மோசஸ், கல்யாணகுமார், வேலுமணி, கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.