வேறு கட்சிக்கு போகின்றனர், இது ஹார்ஸ் ரேசிங் எனவும் மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்தார்.
கோவை
விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவிக்க செல்வது குறித்த கேள்விக்கு, இது தவெக- அதிமுக அவர்கள் கட்சிக்குள் நடைபெறும் விஷயம் எனவும்,
ஏதாவது தவறு நடந்தால் அப்பொழுது நாங்கள் பேசுவோம் என தெரிவித்தார்.
இப்பொழுது தவெக அதிமுக இடையே நடைபெறக்கூடிய பிரச்சனை, இப்பொழுது நாங்கள் பேசுவது சரியாக இருக்காது எனவும் தெரிவித்தார்.
அதிமுக எம்.பி
இன்பதுரை தேர்தல் ஆணையத்தில் எந்த அடிப்படையில் மனு கொடுத்து உள்ளார் , எந்த அடிப்படையில் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது? என கேள்வி எழுப்பிய அவர், எம்.எல்.ஏ கள் சொந்தமாக சுயமாக முடிவெடுத்து வேற கட்சிக்கு செல்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
நேற்று யார் மீது முதல் தகவல் அறிக்கை போடப்பட்டுள்ளது, திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் , தவெக எம்எல்ஏ வை நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஓட்டு போட சொல்லியதாக வழக்கு போட்டு இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார். பணம் கொடுத்து வாங்குவதுதான் குதிரை பேரம், அதுதான் ஹார்ஸ் டிரேடிங் எனவும் தெரிவித்தார்.
பணம் கொடுப்பதாக சொல்வதே தவறு, சட்டப்படி இந்த பேச்சு எடுத்தாலே தவறு எனவும், எம்.எல்.ஏகள் சுயமாக வேறு கட்சிக்கு போகின்றனர் ,இது ஹார்ஸ் ரேசிங் எனவும் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் இந்த 50 நாட்களில் யாரை கேட்டாலும் ஊழல் குறைந்து இருக்கிறது என சொல்கின்றனர், அரசு அலுவலகங்களில் வேலை விரைவாக நடக்கிறது என சாதாரண மக்கள் பேசுகின்றனர் ,50 நாட்களில் இது எவ்வளவு பெரிய புரட்சி என தெரிவித்தார்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை அதிகரித்து இருக்கின்றது என்பது தவறு எனவும், இதுவரை என்ன நடந்து கொண்டிருந்ததோ அது அப்படியே நடந்து கொண்டு இருக்கிறது என தெரிவித்தார். சிங்கப் பெண் திட்டம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று அமல்படுத்தவே நேரம் ஆகும் எனவும், 5 ஆண்டுகளில் நடந்ததை 50 நாட்களில் ஒப்பிடுவது சரியாக இருக்காது எனவும் தெரிவித்தார்.
50 நாட்களிலேயே லஞ்சத்தை ஒழித்து இருப்பது ஆச்சரியமானது என தெரிவித்தார்.
தவெக வாசிங் மெசின் என கனிமொழி எக்ஸ் பதிவு குறித்த கேள்விக்கு, யார் சொல்வதற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது எனவும், 2026 மக்கள் தீர்ப்பு மாற்றம் வேண்டும், திமுக எதிர்க்கட்சியில் உட்கார வேண்டும் என்பதுதான் என தெரிவித்தார். ஏன் திமுக பயப்படுகிறது? எதிர்க்கட்சியின் அமர என்ன பயம்? எதைக் கண்டுபிடித்து விடுவார்கள் என பயம்?, திமுக அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி ஏன் ஆட்சியைப் பிடிக்க பதற்ற படுகின்றனர் என தெரிவித்தார்.
கல்லா பெட்டி கூட்டணி இப்போது தவெக வசம் சென்றது குறித்த கேள்விக்கு, காங்கிரஸ் ஆதரவு கொடுத்து இருக்கிறது, நேற்றைய தினம் தேநீர் பார்ட்டியில் கூட்டணி கட்சியினருக்கு மரியாதையும், மதிப்பும் கொடுத்தனர், 60 ஆண்டு காலத்தில் இதெல்லாம் நடந்தது கிடையாது எனவும், இந்த 50 நாட்களில் சிறப்பான துவக்கம் நடந்துள்ளது எனவும் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்தார்.