கோவை.
எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் வாக்கு முறைகேட்டில் ஈடுபட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று கோரி டெல்லியில் காக்ரோச் ஜனதா பார்டி CJP, அனைத்திய மாணவர் பெரு மன்றம் AISF, அனைத்திந்தி இளைஞர் பெருமன்றம், இந்திய மாணவர் சங்கம் SFI உள்ளிட்ட அமைப்புகள் போராடி வருகின்றன.
இதற்கு ஆதரவாக இடது சாரி கட்சித் தலைவர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் போராட்டக் களத்தில் இருக்கிறார்கள். அவர்கள் மீது ஒன்றிய பாஜக அரசு கொடூரமான தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டுள்ளது.
நேற்று 11.10.2026 நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் AISF பொதுச்செயலாளர் தினேஷ் சீரங்கராஜ், இளைஞர் பெருமன்றத்தின் AIYF பொதுச்செயலாளர் சுக்ஜிந்தர் மகேஷரி, தலைவர் ரோசன் குமார் உள்ளிட்ட தலைவர்களை காவல்துறையினர் கைது செய்து வாகனங்களில் வைத்து கொடூரமாக தாக்கி உள்ளனர்.
மக்களவை உறுப்பினர் ஜான்பிரிடாசை கழுத்தை நெரித்து மூச்சை நிறுத்தி கொல்ல முயற்சி செய்துள்ளனர். இடது சாரித் தலைவர்கள் பலரும் தாக்குதல்களுக்கு உள்ளாகி உள்ளனர். பத்திரிக்கையாளர்கள் கூட மிக மோசமாகத் தாக்கப் பட்டுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 12.10.2026 மாலை 5.00 மணிக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் மு.பிரசாந்த் தலைமை தாங்கினார்.
அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF), அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF), இந்திய மாதர் தேசிய சம்மேளனம் (NFIW), தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் (TOPM) ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்த ஆப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாநில செயலாளர் அ.அசரப் அலி துவக்கி வைத்தார்.
அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில துணைச் செயலாளர் கலை.அஸ்வினி, தேசியக்குழு உறுப்பினர் மௌ.குணசேகர், மாவட்டத் தலைவர் எம்.அபிமன், மாதர் சம்மேளன மாவட்டத் துணைச் செயலாளர் சாந்தி சந்திரன், மாமன்ற உறுப்பினர் பிரபா ரவீந்திரன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்டத் தலைவர் பி.முருகன், மாநிலக் குழு உறுப்பினர் பி.சக்திவேல், மாவட்டத் துணைத் தலைவர்கள் கே.புருசோத்தமன், சி.குழந்தைவேல், தொண்டாமுத்தூர் கமிட்டி செயலாளர் ராஜன், சூலூர் கமிட்டி செயலாளர் கணேசன், மாணவர் பெருமன்ற மாநிலக்குழு உறுப்பினர் ஷிர்பத் நிஷா, பவதாரணி, இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் எம்.மணிகண்டன், என்.கணேசமூர்த்தி, ஆர்.ஹரிஹரசுதன், சி.ஜே.பி. மாநிலை ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் ஒன்றிய அரசின் அடக்கு முறைக்கு எதிராகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவிலக வேண்டும் என்று வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பட்டது.