டாஸ்மாக் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு

  ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் மாநிலம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட போவதாக கோயம்புத்தூர் மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழில் சங்க கூட்டுக்குழு சார்பில் அறிவித்துள்ளனர்

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் வயதை 60-ஆக உயர்த்த வேண்டும், ஊழியர்களுக்கு சாதகமாக நீதிமன்றம் உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர்.

தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது இதற்கு உரிய தீர்வு கிடைக்காததால் இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மீண்டும் அரசு டாஸ்மாக் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்