டெல்லி மாணவர்கள் மீது போலீஸ் தாக்குதல் கோவையில் பெண்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

கோவை.

டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது போலீஸ் வன்முறை தாக்குதல், கண்டித்து கோவையில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மற்றும் மாநில இளம் பெண்கள் அமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இன்று 17.10.2026 காலை 11.00 மணிக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் தேசிய சமையலறத்தின் மாவட்ட தலைவர் ஜே கலா தலைமை தாங்கினார். 

மாமன்ற உறுப்பினர் சாந்தி சந்திரன் முன்னிலை வைத்தார். மாநில இளம் பெண்கள் அமைப்பின் மாநில செயலாளர் கலை அஸ்வினி, மாதர் சமையலறத்தின் மாவட்ட செயலாளர் பேபி மோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் வாக்கு திருட்டுக்கு எதிராக டெல்லியில் போராடிவரும் மாணவர்கள் மற்றும் பெண்கள் மீது போலீஸ் கொடூரமான தாக்குதல்களை நடத்தியுள்ளதை கண்டித்து. முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 
குறிப்பாக பெண்களை டெல்லி காவல்துறை மற்றும் ஆர்எஸ்எஸ் ரவுடிகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்

Feed not found.