திமுக தலைவர் மு க ஸ்டாலின் அதிகமாக பேசக்கூடாது, அமைச்சர் செங்கோட்டையன்

 

கோவை

திமுக தலைவர் மு க ஸ்டாலின் அதிகமாக பேசக்கூடாது, அவர் மக்களால் நிராகரிக்கப்பட்டு இருக்கக்கூடிய முதல் முதலமைச்சர் என சாடியுள்ள அமைச்சர் செங்கோட்டையன், தமிழக வெற்றிக்கழகம் குறித்து கருத்து சொல்வதை விட அமைதியாக இருந்து தன் கட்சியை வளர்க்கும் வழியை அவர் பார்க்க வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்....


சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையத்திற்கு வந்தடைந்த வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது பேசிய அவர், அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் வேறு கட்சியில் இருந்து வந்த ஒரே ஒருவருக்காக பெரிய விழா எடுத்து பெரிய சாதனை சரித்திரம் படைத்தது போன்று செய்துள்ளார்கள் ஆனால் எங்களைப் பொறுத்தவரை ஆள் பிடிக்கும் நிலை  இல்லை என்றார்.தமிழக வெற்றிக் கழக தலைவரை நாடி மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்றும், பல்வேறு இயக்கங்களில் இருந்து வருவது என்பது வழக்கமான ஒன்றுதான் என்றும் கூறிய அவர், திமுக ஆட்சியில் ஆட்சி நடைபெறுகின்ற பொழுதே அனிதா ராதாகிருஷ்ணன் சேரவில்லையா என்றும் கேள்வி எழுப்பினார்.தேர்தல் வருவதற்கு முன்பே பெரும்பான்மை பலம் எங்களுக்கு இருந்த பொழுது திமுகவும் அதிமுகவும் கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடிக்கலாம் என்று சதித்திட்டம் தீட்டியவர் யார் என்று மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும் என்றும் கூறினார்.  இதுவரை தமிழக வரலாற்றில் அதிமுகவோடு திமுக இணைந்து ஒரு ஆட்சியை பிடிக்கலாம் என்று சதிவலை பின்னியது இதுவே முதல் முறை என்றும் அந்த பெருமையும் முதல்வர் விஜயால் தான் நடந்துள்ளது என்றும் தெரிவித்தார்.டெல்லியில் முதல்வர் பிரதமரிடம் பேசியது  மு.க ஸ்டாலினுக்கு எப்படி தெரியும் எனவும் நம் முதல்வர் தமிழ்நாட்டிற்கு என்ன தேவையோ அதனை வாங்கி உள்ளார் எனவும் கூறியதுடன்,தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஏறத்தாழ 5000 மெகாவாட் சோலார் எனர்ஜி மின்சாரம் தயாரித்தும் மத்திய அரசு மானியத்தை திமுகவால் பெற முடியவில்லை என்றும் அதற்கு முதலில் ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும் என்றும் குற்றம் சாட்டினார்.மிதுன் விவகாரம் குறித்தான கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி முன் வைப்பது சிறிய குற்றச்சாட்டு தான் என்றார்.முதலீடுகள் வெளி மாநிலத்திற்கு செல்லக்கூடாது என்று அக்கறை எடுத்து அதற்கான நடவடிக்கைகளை கடந்த 5 ஆண்டுகளில் திமுக எடுத்திருக்க வேண்டும் எனவும் தற்பொழுது இந்த மாநிலத்தில் எவ்வளவு தொழில்களை தொடங்கலாம்? அண்டை மாநிலத்தை காட்டிலும் நம் தமிழ்நாட்டில் எப்படி தொழிலை துவங்கலாம் என்று ஆராயப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.வருவாய் துறையை பொறுத்தவரை தேவையான பணிகளை உருவாக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காலிப்பணியிடங்களை நிரப்புவோம் என்றும் கூறிய செங்கோட்டையன்,வருவாய்த் துறையில் பல்வேறு மாற்றங்களை மூன்று மாத காலத்தில் பார்க்க போகிறீர்கள் என்றும் 3 மாத காலத்திற்குப் பிறகு ஒவ்வொரு துறையும் எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று முதல்வர் அறிவுரை வழங்கி உள்ளார் அதன்படி ஒவ்வொரு துறையும் சாதனை படைக்கும் என்றும் உறுதியளித்தார்.தொடர்ந்து பெண்களை பாதுகாக்க என்ன படையை முதலமைச்சர் அறிவிக்கப் போகிறார் என்று நயினார் நாகேந்திரன் எழுப்பியுள்ள கேள்விக்கு பதில் அளித்த அவர்,நைனார் நாகேந்திரன் எப்படி பெண்களை டீல் செய்கிறார் என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும் எனவும்  அவரைப் பற்றி உங்களுக்கே தெரியும் அவருடைய இயக்கம் எப்படி இன்று 11 சதவீதத்தை நான்கு சதவீதத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் என்பதால் முதலில் அதை சரி செய்ய சொல்லுங்கள் என பதிலளித்தார்.மேலும் தவெக நிர்வாகிகள் மீதான பாலியல் புகார்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், பத்திரிக்கைகளில் வருகிற செய்திகளை வைத்துக்கொண்டு நான் பதில் சொல்ல இயலாது எனவும்  குற்றச்சாட்டுகள் யார் மீது நிரூபிக்கப்பட்டாலும் தலைவர் அதற்குரிய நடவடிக்கை மேற்கொள்வார் எனவும் கூறினார்.தீர்ந்து போன கட்சி யாருடையது? எந்த கட்சி தீர்ந்து போயிருக்கிறது? என்றும் ஸ்டாலின் அதிகமாக பேசக்கூடாது மக்களால் நிராகரிக்கப்பட்டிருக்கக்கூடிய ஒரு முதலமைச்சர் அவர் இது போன்ற கருத்தை சொல்வதைவிட அமைதியாக இருந்து தன் கட்சியை வளர்க்கும் வழியை பார்க்கலாம் எனவும் மக்களிடத்தில் செல்வாக்கு பெறுவதற்கு வழி வகுக்கலாம் ஒரு இயக்கத்தின் தலைமையே சுக்கநூறாக உடைக்கப்பட்டிருக்கிறது  என்றும் இளைய சமுதாயத்தில் இருக்கின்றவர்கள் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்று இந்த முடிவை மேற்கொண்டு இருக்கிறார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.இதேபோல் இதே எடப்பாடி பழனிசாமி எங்களுடைய கட்சியின் சின்னம் இருந்திருந்தால் அவருக்கும் இதே கதிதான் என்றும் விமர்சித்தார்.....

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்