கோவையில் பரபரப்பு!
போத்தனூர் காவல் எல்லைக்குட்பட்ட வெள்ளலூர் பகுதியில், முகமூடி அணிந்து கொண்டு அடுத்தடுத்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இரு கல்லூரி மாணவர்களைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி மாலை, வெள்ளலூர் பேருந்து நிறுத்தம் அருகே தனது உறவினருடன் பேசிக்கொண்டிருந்த சரஸ்வதி என்பவரிடம், முகமூடி அணிந்த நபர் ஒருவர் "முகவரி" கேட்பது போல் நடித்து, திடீரென அவர் கழுத்திலிருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியுள்ளார். அதிர்ச்சியடைந்த சரஸ்வதி கூச்சலிடவே, அந்த நபர் அங்கு தயாராக நின்றிருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பியோடியுள்ளார். இதுகுறித்து சரஸ்வதி அளித்த புகாரின் பேரில், கோவை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்படி, போத்தனூர் காவல் ஆய்வாளர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சம்பவ இடத்தில் இருந்த CCTV கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, குற்றச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட 'TVS Jupiter' இருசக்கர வாகனத்தின் பதிவு எண் TN 99 AD 4548 என்பதைக் காவல்துறையினர் துல்லியமாகக் கண்டறிந்தனர். CCTV காட்சிகளின் அடிப்படையில் தொடர் விசாரணை நடத்திய தனிப்படை போலீசார், சிவகுமார் என்பவரது மகனும், தனியார் கல்லூரி மாணவருமான பரணிதரன் (21) என்பவனைக் கைது செய்தனர். அவனிடம் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
பரணிதரனும், அவனது கல்லூரி தோழரான சிந்து என்பவனும் சேர்ந்து ஆடம்பரமாக வாழ்வதற்காகவும், பரணிதரனுக்கு இருந்த கடனை அடைப்பதற்காகவும் வயதான பெண்களை இலக்கு வைத்து இந்த நகைப் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, தனியாகச் சென்று கொண்டிருந்த சரஸ்வதியிடம் "முகவரி" கேட்பது போல பரணிதரன் கவனத்தைத் திசைதிருப்ப, சிந்து என்பவன் மின்னல் வேகத்தில் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியது உறுதி செய்யப்பட்டது.
தற்போது, விடுதியில் தங்கியிருந்த சிந்துவையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இருவரிடமிருந்தும் பறிக்கப்பட்ட சுமார் 4 பவுன் தங்கச் சங்கிலி, 2 செல்போன்கள் மற்றும் குற்றத்திற்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களே வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு கைதாகியுள்ள சம்பவம் கோவை மக்களிடையே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நகைப் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் கைது! 4 பவுன் நகை, இருசக்கர வாகனம் பறிமுதல்.
YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்
- 🔴LIVE:கோவையில் CM விஜய்பெரியார் அறிவுலகம் திறப்பு விழா | அரசு நலத்திட்ட உதவிகள் | TVK
- 🔴பெரியார் அறிவுலகத்தில் சிலைகள் அகற்றமா? விஜய்க்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் திமுக எம்பி ஈஸ்வரசாமி
- வ.உ.சிதம்பரனார் கப்பல் விட்ட நாள்! 🚢 வணிகர் தினமாக கொண்டாடிய இந்து வியாபாரிகள் சங்கம்
- 🚨 BREAKING NEWS: தேசிய செயலாளர் மா. வெங்கடேசன் செய்தியாளர் சந்திப்பு! 🔴 LIVE | பரபரப்பு பேட்டி
- முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் 95வது பிறந்தநாள் விழா. மரக்கன்றுகள் வழங்கி கொண்டாட்டம்..
- அப்துல் கலாம் பிறந்தநாளில் கனிமொழி சந்தோஷ் MLA தொடங்கிய KGF திட்டம்!
- அகில இந்திய சி.பி.எஸ்.இ ஹாக்கி போட்டி சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி இரண்டாம் இடம்
- 🔴 LIVE: திமுக பரந்தாமன் அதிரடி செய்தியாளர் சந்திப்பு! 🔥 அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு? |களம் TV
- தலைமை தேர்தல் ஆணையரை கண்டித்தும் காவல்துறையை கண்டித்தும் கோவையில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
- கோவை சிங்காநல்லூரில் முடங்கிய அடிப்படை வசதிப் பணிகள்! மாநகராட்சி ஆணையரிடம் நா.கார்த்திக் அதிரடி மனு!