எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம்; பதவிக்காக நான் அரசியலுக்கு வரவில்லை....... ஆனால், அமைச்சர்களை முதல்வர் விரைந்து நியமனம் செய்ய வேண்டும்!! ஜோஸ் சார்லஸ் மார்டின்.....
தமிழகத்தின் உள்ளூர் செய்திகள், மாவட்ட நிகழ்வுகள் மற்றும் மாநில அரசின் செயல்பாடுகள்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பைக்குகளை ஏலம் விடும் போராட்டம்
கோவை, மே 31:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பைக்குகளை ஏலம் விடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை பைக்குகளை ஏலம் விடும் நூதன போராட்டம் காந்திபார்க் ரவுண்டாடான அருகே நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மண்டல செயலாளர் முத்துகிருஷ்ணன், சாந்தி சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவர் புஷ்பராஜ் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறும்போது, ஒன்றிய அரசு 5 மாநிலங்களின் தேர்தல் முடிவு வரை காத்திருந்து விட்டு தற்போது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது. எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும். மேலும், விலை உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு கரப்பான் பூச்சிகளின் வாகனங்கள் என்ற பெயரில் பைக்குகளை ஏலம் விடும் நூதன போராட்டம் நடைபெற்றது, என்றார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கரப்பான் பூச்சி போன்று முகமூடி அணிந்து இருந்தனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கழகப் பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தமிழர் மாண்புமிகு எடப்பாடி கே பழனிச்சாமி
தமிழகத்தில் சீரழிந்து கொண்டிருக்கும் சட்டம் - ஒழுங்கின் மீது கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும் - தினகரன்!!
சென்னை:
‘கோடம்பாக்கம் அருகே 16 வயது சிறுவனுக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்த தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். முதல்வர் விஜய் காவல் அதிகாரிகளுடன் நடத்தும் ஆலோசனைக் கூட்டங்களும், அதிகாரிகளுக்கு அவர் போடும் உத்தரவுகளும் துளியளவும் செயல்பாட்டுக்கு வருவதில்லை என்பதை அன்றாடம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களே சாட்சியாக அமைந்துள்ளன’ என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘சென்னை கோடம்பாக்கம் பகுதியில் 16 வயது சிறுவனின் வாயில் மதுவை ஊற்றி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகத் தலைமைக் காவலர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்புமிக்க காவல்துறையில் பணியாற்றும் காவலரே இத்தகைய மனிதநேயமற்ற செயலில் ஈடுபட்டிருப்பது ஒட்டுமொத்த காவல்துறைக்கும் பெரும் இழுக்கை உண்டாக்கியுள்ளது.
சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக முதல்வர் ஜோசப் விஜய் காவல் அதிகாரிகளுடன் நடத்தும் ஆலோசனைக் கூட்டங்களும், அதிகாரிகளுக்கு அவர் போடும் உத்தரவுகளும் துளியளவும் செயல்பாட்டிற்கு வருவதில்லை என்பதை அன்றாடம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களே சாட்சியாக அமைந்துள்ளன.
எனவே, தன்னுடைய பொறுப்பையும் கடமையையும் மறந்து சிறுவனுக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாகக் கைதாகியிருக்கும் தலைமைக் காவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகத்தில் சீரழிந்து கொண்டிருக்கும் சட்டம் - ஒழுங்கின் மீது கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்
- கோவையில் நடைபெற்ற பாஹா ஆஃப் ரோடு வாகன பந்தய போட்டி
- கோவையில் ரோட்டரி கிளப் மில்லேனியம் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு
- குப்பிச்சிபாளையம் ஹவுசிங் போர்டு மக்களுக்கு இனி ஜாக்பாட்!! இன்று முதல் பஸ் எண் 104 பேருந்து சேவை!!!
- PM👩💼 பெண்கள் பொருளாதார சக்தியாக மாறும் புதிய திட்டம்! கோவையில் வரவேற்பு! வரவேற்பு
- அமைச்சரிடம் பெண்கள் வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு- tvk காவல்துறைக்குஅமைச்சர் கே விக்னேஷ் அறிவுறுத்தல்
- 🔥 கோவையில் மாபெரும் இலவச பல்துறை மருத்துவ முகாம்! அமைச்சர் வி. சம்பத்குமார் நேரில் பங்கேற்பு
- 40 ஆண்டுகளுக்குப் பிறகு கோயம்புத்தூரில் மீண்டும் சர்வதேச கிராண்ட்மாஸ்டர் சதுரங்கப் போட்டி
- 🚨 திமுகவை அவதூறாக பேசிய கவுன்சிலர் சிக்கலில்! வழக்கு தொடர்வோம் – சரத் விக்னேஷ்
- 🔥 கோவையில் டாக்டர் கிருஷ்ணசாமி பரபரப்பு! பழனி கோவில் நில விவகாரத்தை CBI விசாரிக்க கோரிக்கை
- வஹ்தத்தே இஸ்லாமே ஹிந்த் சார்பாக மாநிலம் தழுவிய ஊழியர்களுக்கான நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது,