மதுரை அலங்காநல்லூர் பகுதியில் FQL நிறுவனம் பொது மக்களிடம் பணம் வசூலித்து இரட்டிப்பு தருவதாக மோசடி
தமிழகத்தின் உள்ளூர் செய்திகள், மாவட்ட நிகழ்வுகள் மற்றும் மாநில அரசின் செயல்பாடுகள்.
தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து ஆகஸ்ட் 28-ம் தேதி டாஸ்மாக் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு
மாஞ்சோலை, மேகமலை மற்றும் காவேரி விவகாரங்களில் தமிழ்நாடு அரசு கடும் மெத்தனப்போக்கில்செயல்பட்டு வருகின்றது தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி
கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மக்கள் சந்திப்பு இயக்கம்
மாநில துணைச் செயலாளர் எம்.ரவி கலந்து கொண்டார்.
மேலூர் பகுதிகளில் மொபைல் போன் ஆப் மூலம் நடைபெற்ற பண மோசடி :
- “பால் விலை உயர்த்தாவிட்டால் போராட்டம்!”
- “24, 25ல் பால் நிறுத்தம்!”
- “பால் விலை உயர்வு எப்போது?”
GST சீரமைப்பு, மின் கட்டண சலுகை வழங்க வேண்டும் SDPI தேசிய தலைவர் ஃபைஜி பரபரப்பு பேட்டி!
கோவை
கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் SPDI கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் SPDI தேசிய தலைவர் ஃபைஜி கலந்து கொண்டார். மேலும் SDPI மாநில தலைவர் நெல்லை முபாரக் உட்பட அனைத்து மாவட்ட தலைவர்கள் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் கோவையில் மூலப்பொருள் வங்கி மற்றும் விலை கட்டுப்பாட்டு வாரியம் அமைக்க வேண்டும், சிறு தொழில்களை பாதுகாக்க வட்டி மானியம் ஜிஎஸ்டி சீரமைப்பு மின் கட்டண சலுகை வழங்க வேண்டும், கோவை மற்றும் திருப்பூர் தொழில் மண்டலங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு செயல்படுத்த வேண்டும், ஈரோடு மாவட்டத்தில் தேசிய மஞ்சள் வாரிய கிளை பெருந்துறையில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும், போதைப் பொருள் புழக்கத்தை தடுப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், மதம் மாறிய இஸ்லாமியர்களின் சமூக நீதி உரிமையை பாதுகாக்க தமிழக அரசு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும், FCRA சட்ட திருத்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த SPDI தேசிய தலைவர் ஃபைஜி,பாஜகவிற்கு எதிராக போராட்டம் நடத்தவும் SDPI கட்சியை வலுப்படுத்தும் வகையிலும் இக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பாஜக செயல்பட்டு வருகிறது என குற்றம் சாட்டிய அவர் பாஜகவிற்கு எதிராக மாணவர்கள் உட்பட பலதரப்பட்ட மக்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் என்றும் ஒரு Failure அரசாக பாஜக அரசு உள்ளது என விமர்சித்தார்.மக்களை மத அடிப்படையில் பிளவு படுத்தி தான் மீண்டும் மீண்டும் பாஜகவினர் ஆட்சிக்கு வந்து கொண்டிருப்பதாகவும் இதனை மக்களிடம் எடுத்து சொல்வோம் என்றும் கூறிய அவர் ஆனால் இதனை எல்லாம் செய்ய வேண்டிய பாரம்பரியமான கட்சிகளான காங்கிரஸ் போன்ற கட்சிகள் இதனை செய்யவில்லை மக்களிடம் சொல்லவில்லை மக்களின் போராட்டங்களுக்கு அவர்கள் ஆதரவும் அளிக்கவில்லை என்றார்.பாஜகவை தோல்வி அடைய செய்ய வேண்டிய பொறுப்பு SDPI க்கு உள்ளது என்று கூறிய அவர் பாஜக ஒரு மதத்தை எதிராக காட்டி ஆனந்தம் அடைகிறார்கள் என்றும் வந்தே மாதரம், வக்ஃபு சட்டம் இரண்டும் ஒரு சமூக மக்களை கொச்சைப்படுத்தும் உள்ளது என்றார். FCRA சட்டம் சேவை அமைப்புகளை முடக்கும் விதமாக உள்ளதாகவும் அது மிகவும் ஆபத்தானது என எடுத்து கூறி வருவதாகவும் எந்த ஒரு திருத்தமும் அதில் கொண்டு வரக்கூடாது என தெரிவித்தார்.நீட் தேர்வு க்கு எதிராக முன்வைக்கும் கோரிக்கைகளை ஆதரிப்பதாகவும்ஆனால் CJP உடன் சேர்ந்து SDPI இல்லை என்றார். தேர்தல் நேரங்களில் பாஜகவிற்கு எதிர் என்றால் காங்கிரஸ் கட்சியை தான் குறிப்பிடுவார்கள் என்றும் ஆனால் தற்போது அப்படி இல்லை மக்களே பொது வெளிக்கு வந்துள்ளார்கள் என CJP யை சுட்டிக்காட்டினார். மேலும் 3 வருடத்தில் பாஜக All out ஆகிவிடுவார்கள் என்றும் CJP யை ஆதரிக்க கோடிக்கணக்கான மக்கள் வந்தார்கள் என்றார்.மாநில தலைவர் நெல்லை முபாரக் பேசுகையில், நீட் கொண்டு வந்த காலத்தில் இருந்தே அதற்கு விலக்கு வேண்டும் என்று கூறிய மாநிலம் தமிழகம் என்றார். சிறைவாசிகள் விடுதலை கடந்த ஆட்சியில் கொஞ்சம் நடந்தது இந்த அரசு பொது மன்னிப்பின் பேரில் அனைவரையும் வெளிவிட வேண்டும். காலவரையற்ற நீண்ட பரோலை கொடுக்க வேண்டும் என்றார்.
தவெக அரசு 100 நாள் ஆட்சி குறித்தான கேள்விக்கு நல்லதை பாராட்டுகிறோம் தவறுகளை சுட்டி காட்டுகிறோம் என்று பதில் அளித்தார்.
கல்வி நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து மாமன் சீரா? - கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
மதுரையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் பேட்டி
கூறியதாவது:
“வார்த்தை ஜாலங்களை தவிர்த்தால் நல்லது!” – சட்டமன்றத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி
சட்டமன்ற கூட்டத்தொடரை முடித்துக் கொண்டு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை பீளமேடு விமான நிலையத்திற்கு அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் சம்பத் வருகை தந்தார் பின்னர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசும்போது,
சட்டப்பேரவை நிகழ்வுகள் பொதுவாக பேரவை தலைவர் சொன்னதை போல தமிழக முதல்வர் சொன்னதைப் போல சட்டப்பேரவை பொருத்தமட்டில் எதிர்காலத்தில் என்ன செய்யலாம் என்ற கருத்துக்களை பரிமாறு கொண்டாள் நன்றாக இருக்கும் வார்த்தை ஜாலங்களை தவிர்த்தால் நன்றாக இருக்கும் என்றார். எம்எல்ஏவுக்கு கார் வழங்குவது குறித்த கேள்விக்கு, ஒவ்வொரு எம்எல்ஏக்கும் கார் மற்றும் உதவியாளர்கள் தேவை சட்டமன்ற உறுப்பினர்கள் சிறப்பாக நடைபெற்ற அனைத்தும் தேவை நகராட்சி தலைவர்களுக்கும் ஒவ்வொரு நபருக்கும் கொடுக்கப்படுகிறது திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் கொடுக்கப்பட்டுள்ளது அவர்களால் செய்து கொடுக்க முடியாத எண்ணம் தான் இதற்குக் காரணம் திமுகவினருக்கு
நிதி நெருக்கடி இருந்தாலும் தன்னலம் கருதாது மாற்ற வேண்டிய கடமை எம்எல்ஏவுக்கு உண்டு எனவே பல்வேறு நிதி சுமை இருந்தாலும் கூட செய்யலாம் என்று செய்து வருகிறோம் ஆந்திராவிலும் இதுபோன்று வழங்கி உள்ளார்கள் நிதி நெருக்கடி காரணமாக திமுக சொல்வது அவர்களால் முடியவில்லை என்பதால் பேசி வருகிறார்கள்
வறட்சி நிவாரணம் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு தான் கொடுக்கப்படும் நிலத்தின் தன்மை எவ்வாறு மாறி உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் அதன் பின்பு கொடுக்கப்படும்,
மூன்று கோப்புகள் உள்ளது என்று அமைச்சர் சொன்னதற்கு சட்டத்தின் அடிப்படையில் கோப்புகளை பார்த்து அதில் என்ன இருக்கிறது என்பதை பார்த்து அதன் பின்பு சட்ட நடவடிக்கை பார்த்து பின்னர் முடிவெடுக்கப்படும் அதை அவர் ஆராய்ந்து பார்த்துள்ளார் அதன் பின்பு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார் இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் பொழுது தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சம்பத்குமார் உடனிருந்தார்.
பயிர் கடன் தள்ளுபடி & மேகதாது விவகாரம்! தவெக அரசை கண்டித்து அதிமுக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்!
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம்.*
YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்
- 🔴LIVE:கோவையில் CM விஜய்பெரியார் அறிவுலகம் திறப்பு விழா | அரசு நலத்திட்ட உதவிகள் | TVK
- 🔴பெரியார் அறிவுலகத்தில் சிலைகள் அகற்றமா? விஜய்க்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் திமுக எம்பி ஈஸ்வரசாமி
- வ.உ.சிதம்பரனார் கப்பல் விட்ட நாள்! 🚢 வணிகர் தினமாக கொண்டாடிய இந்து வியாபாரிகள் சங்கம்
- 🚨 BREAKING NEWS: தேசிய செயலாளர் மா. வெங்கடேசன் செய்தியாளர் சந்திப்பு! 🔴 LIVE | பரபரப்பு பேட்டி
- முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் 95வது பிறந்தநாள் விழா. மரக்கன்றுகள் வழங்கி கொண்டாட்டம்..
- அப்துல் கலாம் பிறந்தநாளில் கனிமொழி சந்தோஷ் MLA தொடங்கிய KGF திட்டம்!
- அகில இந்திய சி.பி.எஸ்.இ ஹாக்கி போட்டி சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி இரண்டாம் இடம்
- 🔴 LIVE: திமுக பரந்தாமன் அதிரடி செய்தியாளர் சந்திப்பு! 🔥 அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு? |களம் TV
- தலைமை தேர்தல் ஆணையரை கண்டித்தும் காவல்துறையை கண்டித்தும் கோவையில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
- கோவை சிங்காநல்லூரில் முடங்கிய அடிப்படை வசதிப் பணிகள்! மாநகராட்சி ஆணையரிடம் நா.கார்த்திக் அதிரடி மனு!